fbpx
RETamil Newsஉலகம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு !

2018-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.

காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். காங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான ‘யாஷிதி’ இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். ‘யாஷிதி’ இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான ‘யாஷிதி’ இன பெண்களுக்காக போராடியதற்காக  நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் வரும் 8-ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close