அன்னாசிப் பழத்தின் உடல் ஆரோக்கிய நன்மைகள் !!
அன்னாசிப்பழம் பல ஊட்டச்சத்துகள் அடங்கிய பழமாகும். இதில் ப்ரோமெலைன், புரதம், கார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை, நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அன்னாசிபழத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி5 , வைட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பதால் மிகுந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது.
அன்னாசிப்பழத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசிப்பழம் :
அன்னாசிபழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது. எனவே உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை ஊக்குவித்து நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பார்வை குறைபாட்டினை தடுக்கும்:
அன்னாசிபழத்தில் உள்ள வைட்டமின் ‘எ’ கண் பார்வை திறனை அதிகரிக்கும் திறன் கொண்டது.
செரிமானமண்டலத்தை பாதுகாக்கும்:
அன்னாசிப்பழத்தை உண்பதால் செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கும்.
எலும்புகள் வலிமையடைய:
அதிகளவு மக்னீசியம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்கும்.
ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:
அன்னாசிபழத்தில் பொட்டாசியம், காப்பர் தாதுக்கள் அதிகளவில் உள்ளது. எனவே காப்பர் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகளவில் உற்பத்தி செய்யும். ரத்த ஓட்ட மண்டலத்தை பாதுகாக்கிறது.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும். புற்று நோய் மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கும். அன்னாசிபழத்தில் வைட்டமின் ‘சி’ மற்றும் ப்ரோமெலைன் சத்து இருப்பதால் இருமல்,சளி தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.