RETamil Newsதமிழ்நாடு
அதிமுகவுக்கு நெருக்கடி தரும் மத்திய அரசின் வருமான வரிச்சோதனை – திருமாவளவன் குற்றச்சாட்டு!

அதிமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் மத்திய அரசு வருமான வரி சோதனை செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
வருமான வரி சோதனை கூடாது என்று தான் கூறவில்லை என்றும் உள்நோக்கம் இருப்பதாக தான் யூகிக்க முடிகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறுகையில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமானவரி துறையினர் அதிமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இத்தகைய சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது வியப்பைத் தருகிறது.
இந்த நடவடிக்கைகள் கூடாது என்று நான் கூறவில்லை ஆனால் இந்த நடவடிக்கைகளில் உள்நோக்கம் இருக்கிறது என்று யூகிக்க முடிகிறது என்றார்.