RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
அங்கன்வாடி மையங்களில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் !

ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
சூரியசக்தி வாயிலாக இயங்கும் மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்,கருப்பணன் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் ஆங்கில மோகம் மேலோங்கி உள்ளதால் அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.