RETamil News
கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை வானிலை மையம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துவருகிறது.
இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலான மழையும், கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது,
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிக பட்சமாக கோவையில் உள்ள சின்னக்கல்லார், மற்றும் வால்பாறையில் 7 செமீ மழையும், பொள்ளாச்சி நீலகிரியில் ஜி.பஜாரில் 5 செமீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழையும் பதிவாகி உள்ளது
சென்னையில் லேசான காற்றுடன் கூடிய மேகமூட்டம் காணப்பட்டது