fbpx
GeneralRETamil Newsஉலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…! டிரம்ப் அறிவிப்பு!

USA quits WHO, trump announces

வாஷிங்டன்:

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளது. எனவே அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என்றும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார். இந் நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இது தொடர்பாக ஐநா பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.

ஐநாவின் நடைமுறைப்படி 2021ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி (1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close