fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்..! கருத்துகணிப்புகளில் தகவல்!

US Trump will retain power again

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படி உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார். ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

தேசிய அளவு கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close