fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!

US president Trump decision about H1B visa

வாஷிங்டன்:

இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்ய மற்ற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்களே எச்-1 பி விசாக்களை அதிகம் பெற்றுள்ளனர்.

இந் நிலையில், கொரோனா ஊரடங்கால் எச்1பி, எச்4 விசாவை நிறுத்தி வைத்துள்ளார் அதிபர் டிரம்ப். அந்த தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க போகிறார் என தகவல் வெளியானது.

இதனிடையே எச் -1 பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்குமாறு டிரம்ப், உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியுள்ளதாவது:

எச் -1 பி விசா முறை, தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகர்கிறது. டிரம்ப் நிர்வாகம் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, அமெரிக்கர்களுக்கு வேலைகளை பாதுகாக்க குடியேற்ற முறையை சீர்திருத்துகிறது.

அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டு பணியாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாகவும், அமெரிக்க தொழிலாளர் சந்தையை குறைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close