fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!

Tight security among PM Modi ayohdhya visit

அயோத்தி:

பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி பூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் அயோத்தி வருகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் போலீஸ் மற்றும் சஷஸ்திர சீமா பல் படையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில போலீசார் கூறியதாவது: நேபாள எல்லையை ஒட்டியுள்ள மஹாராஜ்கஞ், சித்தார்த் நகர், ஷ்ரவஸ்தி, பஹரைச் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சஷஸ்திர சீமா பல் படையின் சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எல்லை வழியாக வருவோரின் அடையாளங்களை நன்கு பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சோனாலி, டுடிபாரி சோதனை சாவடிகளில், மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு பரிசோதனை நடைபெறுகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close