ஆசிரியர் திட்டியதால் மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
The student tried to commit suicide by jumping off the school building
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர் திட்டியதாக கூறி ரகு என்ற பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளிக் கட்டிடத்தின் மீது ஏறி கீழே குதித்துள்ளான்.
இதில் பலத்த காயமுற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களை திட்டுவது, அடிப்பது, என கொடுமைப்படுத்துவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இனிமேலும் மாணவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஆசிரியர் அடித்ததில் ஒரு மாணவி மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.