RETamil News
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.