பேரிடர் பயிற்சிகள் மேற்கொள்ள அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்:ஸ்டாலின் கண்டனம்!
The government must issue the order to conduct the disaster drills:Stalin
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவி லோகேஸ்வரி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோரும், உடன் பயிலும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பேரிடர் பயிற்சியை மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளர் அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகமும் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புடன் நடைபெற வேண்டும் என்றும் பேரிடர் பயிற்சியில் நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.