fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

காணொளி வழியாக நாடாளுமன்ற கூட்டம்..!விரைவில் அறிவிப்பு…?

Video conference parliament meeting

டெல்லி:

காணொளி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா என்பது பற்றி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலங்களவை தலைவர் அறையில் சந்தித்துக் கொண்ட வெங்கய்யா நாயுடுவும், ஓம் பிர்லாவும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைக் காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரு அவை தலைமைச் செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற கூட்டத்தைக் காணொளி வழியாக நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசியதாக தெரிகிறது.

முன்னதாக, இதுபோன்ற கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஆனந்த் ஷர்மா, தகவல் தொழில் நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சசி தரூர் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close