முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது!;இது உத்தரபிரதேச கொடுமை!!

லக்னோ : பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது செக்கை பெற்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியை சேர்ந்தவர் அலோக் மிஸ்ரா. மாநில கல்வி வாரியம் நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வில் 93.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 7 வது இடம்பிடித்தார்.
கடந்த மே மாதம் 29 ம் தேதி லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மாணவர் அலோக் மிஸ்ராவை பாராட்டி ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
காசோலையினை, அலோக், ஜூன் மாதம் 5 ம்தேதி, ஷஜ்ராத்கன்ஜ் பகுதியில் உள்ள வங்கியில்கொடுத்துள்ளார்.
கையெழுத்து ஒத்துப்போகவில்லை என்று கூறிய வங்கி, காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக கூறிவிட்டது.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் அலோக் முறையிட்டதை தொடர்ந்து, அவருக்கு புதிய காசோலை வழங்கப்பட்டது.
செக் பவுன்ஸ் ஆனதற்காக, அலோக்கிடம் அபராதத்தை அவ்வங்கி வசூலித்ததும் முதல்வர் வழங்கிய காலோலைக்கே இந்த நிலைமையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.