RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே பா!! என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி செம நோஸ் கட்!!!
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம் விளையாட்டு தனம் செய்கிறார் என்று நெட்டிசன்கள் வறுதத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தியும் மோடியை சீண்டியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டில் இதுபற்றி கூறுகையில்,
டியர் பிரதமரே, விராட் கோஹ்லி ஃபிட்னஸ் சவாலை நீங்கள் ஏற்க தயார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னிடமும் ஒரு சவால் உள்ளது,
எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் அல்லது, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி, உங்களை நிர்பந்தம் செய்து அதை செய்ய வைப்போம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.