fbpx
RETamil Newsஇந்தியா

பி.எஸ்.எல்.வி சி – 47 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது !

ஆந்திர மாநிலம் ஸ்ரீரிஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதாவது புதன்கிழமை காலை 9.28 மணியளவில் பி.எஸ்.எல்.வி சி – 47 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான ‘கார்டோஸாட்-3’ என்ற பிரதான செயற்கைகோள்களை , அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிகரீதியான நானோ வகை செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி சி – 47 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4மீட்டர் கொண்டதாகவும், இதில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களின் எடை 1,625 கிலோ ஆகும்.

இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்டுள்ள ‘கார்டோஸாட்-3’ என்ற செயற்கைக்கோளானது மிகவும் மேம்படுத்தப்பட்ட வகையை சேர்ந்ததாகவும் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காகவும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close