fbpx
ChennaiGeneralRETamil Newsதமிழ்நாடு

ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!

Rs. 13.38 crore penalty who violates Lock down rules

சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் தேவையின்றி நடமாடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கை மீறியதாக 6,57,399 பேர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். 4,78,714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,08,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close