fbpx
REஉலகம்

அமெரிக்கா நிதியை நிறுத்த!சீனா 30 மில்லியன் டாலர் கொடுக்க எங்கோ இடிக்குதே!!

பெய்ஜிங்;

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகளாவிய முயற்சிகளுக்கு  உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் வழங்குகிறோம் என்று  சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதியுதவியை நிறுத்த உள்ளதாக, WHO விற்கு நிதி வழங்கும் முதல் முக்கிய நாடான அமெரிக்கா கை விரித்தது.

இந்த  நிலையில், சீனா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீன, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது.

ஏற்கனவே 20 மில்லியன் டாலர் உதவி வழங்கிய நிலையில், கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வழங்கும் என அறிவித்துள்ளது..

இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என்று  ஜெங் ஷூவாங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்தார்.

சீனாவில் உருவான கொரோனா பரவியபோது, அந்த தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு மூடி மறைத்து விட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்கா அதிக நிதி கொடுத்த போதிலும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சாதகமாக நடந்து கொண்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

டிரம்ப்பைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் WHO க்கு வழங்கி வந்தது.

அதே நேரத்தில் இதற்கு மாறாக, சீனா ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே கொடுத்து வந்தது.

சீனாவின் நிலைமையை WHO துல்லியமாக மதிப்பிட்டிருந்தால், கொரோனா பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் என்பது ட்ரம்ப் இன் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், சீனா 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்துள்ளதை வைத்து பார்க்கும்போது,

ட்ரம்ப் குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம் என்று,

நெட்டிசன்கள் பலரும் சந்தேக கேள்வி எழுப்பிவருகிரார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close