RETamil News
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு;அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏராளமானோர் வெளியே ஓடிவந்து சாலைகளில் குழுமினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு குறித்து அதிகாரிகள் இப்பொழுது விசாரித்து வருகின்றனர்.