அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பல லட்சம் மோசடி செய்த தலைமை செயலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் சட்டத்துறை அலுவலகத்தில் ராமு என்பவர் உதவியாளராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் வாங்கிக்கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.
பணிநியமன ஆணைகளை பெற்று பணிக்கு சென்ற பொது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு ராமுவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடி சம்பவத்தில் உயரதிகாரிகள் யாரும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என போலீசார் ராமுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.