fbpx
REஇந்தியா

மல்லையா நிரவ்மோடி உள்பட 50 பேரின் கடன்கள் தள்ளுபடி;ரிசர்வ் வங்கி!!

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர், இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும்,

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்தது என்ற விவரத்தையும் வெளியிட்டது.

அதற்கு காரணம் தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வங்கி வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:

மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடியும்.

ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடியும்.

வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடியும்

ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடியும்

குடோஸ் கெமி -ரூ.2,326 கோடியும்

ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212  கோடியும்

சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடியும்

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடியும்

* பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடியும்

மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் முறையே -ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடியும்.தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close