
லக்னோ: கடவுள் ராமனால் கூட பலாத்கார சம்பவத்தை தடுக்க முடியாது என உ.பி., மாநில பா..ஜ.க எ ம்.எல்.ஏ., சுரேந்திர சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
உ.பி மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க வின் எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் உன்னோவோ போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது கடவுள் ராமன் பூமிக்கு அவதரித்து வந்தாலும் கூட அவரால் கூட கற்பழிப்பு சம்பவங்களை நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
பாலியல் பலாத்காரங்களை நிறுத்துவதற்கு நாட்டிலுள்ள அரசியலமைப்பு சட்டம் அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாது. சமுதாயத்தில் நல்ல செயல்களை செய்வதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் கட்டுப்படுத்தபடும் என அவர் கூறினார்.
இவரின் இக்கருத்து வழக்கம்போல சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் தாஜ்மஹாலை ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராவணின் தங்கை சூர்ப்பணகையுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.