RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்: அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நக்கல் பேச்சு!!!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் வானத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலே தான் வெற்றிடம் உள்ளது.அந்த வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் நிரப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.