GeneralRETamil NewsTrending Nowஉலகம்
கத்தாரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிப்பு…!
Qatar bakrid festival holiday announced

கத்தார்:
கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020 வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 6, 2020 வியாழக்கிழமை முடிவடைகிறது. ஊழியர்கள் 2020 ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கத்தார் மத்திய வங்கி (கியூசிபி), கியூசிபி மற்றும் கத்தார் நிதிச் சந்தைகள் ஆணையத்தின் (கியூஎஃப்எம்ஏ) மேற்பார்வையின் கீழ் செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கத்தார் மத்திய வங்கியின் ஆளுநர் விடுமுறை குறித்த அறிவிப்புகளை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
















