fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Orange rain alert for kerala

டெல்லி:

கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது கேரளாவின் மத்திய பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் நீர் சூழ்ந்து, சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழையால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அதனால் அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து 4 முதல் 5 நாட்களுக்கு மஹாராஷ்டிராவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மழையின் தீவிரம் அதிகரித்து காணப்படும என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close