fbpx
BusinessRETechnology

ஒரு கோடி பரிசு! மத்திய அரசு புதிய சவால்!!

நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி  வரும் நிலையில்,

மத்திய அரசு சார்பில் டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் ஒன்றை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலையில் உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வீடியோ கான்ஃபரென்சிங் சேவைகளே ஒற்றை தீர்வாக இப்பொழுது மாறியிருக்கிறது.

வீடியோ கான்ஃபரென்சிங் செய்ய பொதுமக்கள் ஜூம் எனும் செயலியை பயன்படுத்த துவங்கினர்.

எனினும், அதில் அதிகளவு பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அரசு சார்பில் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் இதர செயலிகளை பயன்படுத்தவும்  அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளும் வீடியோ கான்ஃபரென்சிங் மூலமாகவே இப்பொழுது நடைபெற்றுவருகிறது.

அதனடிப்படையில்  வீடியோ கான்ஃபரென்சிங் சேவையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய போட்டி போன்ற சவாலை மத்திய அரசு விடுத்துள்ளது.

இன்னோவேஷன் சேலஞ்ச் என அழைக்கப்படும் இந்த போட்டி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://startups.meitystartuphub.in/public/application/inc/5e92ec1269e3401cd7bc6db7

மத்திய அரசின் இன்னோவேஷன் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொள்வோர் நாட்டிற்கென பிரத்யேக வீடியோ கான்ஃபரென்சிங் செயலி ஒன்றை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை அறிவித்துள்ளது.

வெற்றிகரமாக செயலியை உருவாக்கி கொடுப்போருக்கு  ரூ. 1 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் என அரசு  அதிரடியாக அறிவித்துள்ளது.

போட்டியில் கலந்து கொள்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை மற்றும் விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை விரிவாக மத்திய அரசின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close