fbpx
Others

தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழுவில் தீர்மானம் !!— சிறப்பு செய்தி

தமிழ்நாட்டில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும்!

தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழுவில் தீர்மானம் !!

தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுக்குழு கூட்டம் சென்னை போரூர் ரவுண்டானா அருகில் உள்ள கண்ணப்பர் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றதுகூட்டத்திற்கு தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர் டாக்டர். சி. எம். சாமி தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ஆர் .முருகக்கனி பொதுச்செயலாளர் அகத்தியா.அ. ஞானம் பொருளாளர் எஸ். ஜே. அருண் கேசவன் நிர்வாக இயக்குனர் குரு. ஏழுமலை முன்னிலை வகித்தனர்.அனைவரையும் கணக்கு தணிக்கையாளர் கோபால் ஆசிரியர் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் மற்றும் தமிழ்நாடு சிலம்ப கழக புலவர் எம். வி. எம். வேல்முருகன் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அரசு சிலம்ப கலை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசான்கள் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சிலம்பத்தை கட்டாய பாடம் ஆக்க வேண்டும்.
மாநில அளவில் நடக்கும் முதல்வர் கோப்பைக்கான சிலம்பப் போட்டி வெளிப்படை தன்மையுடன். திறமையான நடுவர்களை வைத்து நடத்தப்பட வேண்டும்.கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. அந்தப் போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும். பெண்களுக்கு உடல் வலிமை மற்றும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கக்கூடிய தற்காப்பு விளையாட்டு சிலம்பம். பெண்களோடு தொட்டு பழகக்கூடிய விளையாட்டு அல்ல தூர நின்று கற்றுக் கொடுக்கின்ற ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகவே அரசு இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நடுவர்கள் உள்ள ஒரு சங்கம் இந்த சங்கம் இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர். விளையாட்டு துறை முதன்மை செயலர் ஆகியோரை நேரில் சந்திப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மலேசிய சிலம்ப ஆசான். சாண்டோ ரத்தினம். மற்றும் ஆசான்கள் கிருஷ்ணசாமி . சாமி ஜெயபால். தனபால். பால சேகர்.
சௌந்தர்ராஜன்.எம் .ஜி. சேகர் சிவ கணேசன் . ராஜன் விஜயன் . சண்முகம். சண்முகராஜா. ரிஸ்வான் பாஷா . திருநாவுக்கரசு. பரசுராமன் .ஸ்டாலின். வில்சன் சண்முகவேல். விஸ்வநாதன். உள்பட சிலம்ப ஆசான்கள் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close