fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு..!தமாஷ் டுபாக்கூர் நித்தியானந்தா!

Nithiyananda bank announcement

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தி நாளன்று நித்தியானந்தா கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எப்போதும் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் கொரோனா வந்ததில் இருந்து முன்பை போல வீடியோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார்.

ஆனால், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். கைலாசாவிற்கு நிறைய நன்கொடைகள் கிடைத்துள்ளது. நல்ல காரியங்களுக்காக இதலை செலவிட வங்கி தொடங்கியுள்ளேன்.

வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது. கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.

உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் கைலாசாவிற்கக அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உடபட்டே நடக்கும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தேடப்பட்டுவரும் குற்றவாளியான நித்தியானந்தா இதுபோல பேசி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்திவருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close