fbpx
GeneralRETamil Newsஇந்தியா

தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு…! ரூ.10,000 மூல தன கடன் திட்டம்!

Aadma nirbar scheme for sellers

டெல்லி:

தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘  திட்டத்தை அறிவித்துள்ளது.

தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் ‘  திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

பொது சேவை மையம் மூலம் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகமானது, தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘  திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த கடன்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு வழங்கப்படுகிறது. இந்த கடனை பெறுவதற்கு நாடெங்கிலும் உள்ள 3.8 லட்ச பொது சேவை மையத்தில் (Common Service Center) வழிமுறை கூறப்படுகிறது.

ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலம், தெருவோர வியாபாரிகளை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச்செயலாளர் சஞ்சய் குமார்  கூறுகையில், ‘ ஆத்ம நிர்பார் திட்டத்தில் இணையவழி பரிவர்த்தனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இணைய பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படும். என தெரிவித்தார்.

இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில்  50,000 பேருக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close