fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

Maharashtra makes huge corona dead

மும்பை:

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பாதிப்புகளோடு, உயிரிழப்புகளும் மிக அதிகம்.

இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது மகாராஷ்டிரா.

நாட்டில் அதிக அளவாக இங்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1ம் தேதி 10,498 பேருக்கு பாதிப்பு இருந்ததது. ஆனால் இந்த 3 வாரங்களில்  அதன் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 5 மடங்கு உயர்ந்து 52 ஆயிரத்து 667 ஆக இருக்கிறது.

இதேபோன்று, பலி எண்ணிக்கை இன்று 1,695 ஆக உயர்ந்துள்ளது.  15 ஆயிரத்து 786 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தொடர் கொரோனா பாதிப்பால் அம்மாநில மக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close