fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ்…! மகாராஷ்டிரா அறிவிப்பு!

Maharashtra announced all pass to college students

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும்  நடைபெறவில்லை. தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், இந்த தேர்வு நடைபெறும் தேதி உறுதியானதா என்பது தெரிய வில்லை. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு இன்னும் நடைபெறவில்லை என்பதும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த அறிவிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்  தேர்ச்சி என்ற அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும், 3ம் ஆண்டு மாணவர்கள் சதவீத அடிப்படையில் மதிப்பெண் அளித்து  பட்டம் அளிக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close