fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்

திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க வந்த கேரள முதல்வர் பினராய் விஜயன் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினிடமும், கருணாநிதியின் மகள் கனிமொழி இடமும் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கருணாநிதியின் உடல் நிலை விரைவாக சீரடைந்து வருவதாக ஸ்டாலின் மற்றும் அவரது மகள் கனிமொழி தெரிவித்ததாக கூறினார்.

கருணாநிதி பூரண குணமடைய கேரளா மக்கள் சார்பில் தான் வாழ்த்துவதாக பினராய் விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close