fbpx
RETamil News

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தாக்கியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தாக விளங்குகிறது.

இங்கிலாந்திலும் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்த தொற்று நோயினால் இங்கிலாந்து நாட்டில் சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டின் பெரும் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை.இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார்.சிகிச்சிக்கு பிறகு தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னரும் அவருக்கு நோயின் அறிகுறி தெரியவந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Articles

Back to top button
Close
Close