fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பற்றி மத்திய அரசு முடிவு…! சுகாதாரத்துறை தகவல்!

Neet Entrance exam exemption for tamilnadu

சென்னை:

தமிழகத்தில் நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது.

தமிழகத்தில், கொரோனா தீவிரமாக இருப்பதால் இந்தாண்டு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று அதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நீட் தேர்வுக்கு இந்தாண்டு மட்டும் விலக்கு கோருவது பற்றி, தன்னிச்சையாக கூற முடியாது. அரசு தான் முடிவுவெடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது.

தமிழகம் போன்று டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close