fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு…! மத்திய சுகாதாரத் துறை தகவல்

India dead rate in corona less says health ministry

டெல்லி:

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ்  அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பாதிப்பு 56,36,993 ஆகவும் , குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும் உள்ளது. பலி எண்ணிக்கை 3,49,273 ஆகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை உலக நாடுகள் பட்டியலில் கொரோனா பாதிப்பில் 10வது இடத்தில் இருக்கிறது. 1,45,380 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: மீட்பு விகிதம், 7 சதவிகிதம் முதல் 41.61 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இது வரை 60,490 பேர் குணமடைந்துள்ளனர். முதல் ஊரடங்கில் 7.1%, இரண்டாவது 11.42%, மூன்றாவது ஊரடங்கில் 26.59% என அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் விகிதம் தற்போது 41.61% ஆக உள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதுபோன்று இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 3.3 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 2.87 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உலகிலேயே இதுதான் மிகவும் குறைவான விகிதம் ஆகும். உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் இறப்பு விகிதம், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 0.3 சதவிகிதமாக உள்ளது. உலக அளவில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதம் 4.4 சதவிகிதமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் லாவ் அகர்வால்.

Tags

Related Articles

Back to top button
Close
Close