fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!

India corona status

டெல்லி:

இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, விரைவில் இரண்டாவது இடத்திற்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் கடந்த சில தினங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2  தினங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,525 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23 ஆம் தேதி 12 லட்சமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 24ஆம் தேதி அன்று 13 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் இரண்டே நாட்களில் 13 லட்சத்தில் இருந்து தற்போது 14 லட்சத்தை தாண்டி உள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. இம்மாநிலத்தில் மட்டும் 3.57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் நேற்று 5,199 பேர்களுக்கும் தமிழகத்தில் 6986 பேர்களுக்கும், கேரளாவில் 927 பேர்களுக்கும், தெலுங்கானாவில் 1500க்கும் மேற்பட்டோர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close