காரில் சென்ற சிலை கடத்தல் கும்பல் , துரத்தி பிடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் சிலைகள் கடத்த போவதாக தகவல் கிடைத்ததும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தன் குழுவுடன் ஆட்டோவில் துரத்திச்சென்று அக்கும்பலையும் பிடித்து சிலைகளையும் மீட்டெடுத்தடுத்தார்.
சென்னையில் உள்ள காரப்பாக்க பகுதியில் கார் ஒன்றில் சிலைகள் கடத்தப்போவதாக ரகசிய தகவல் கிடைத்ததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு 3 ஆட்டோகளில் தனித்தனியே பிரிந்து சிலை கடத்தல் காரினை துரத்தி பிடித்தனர்.
துரத்தி பிடித்த அந்த காரை சோதனையிட்ட போது காருக்குள் 20கிலோ எடை உள்ள ஐம்பொன் அம்மன் சிலை கடத்தப்பட்டுள்ளது என்று உறுதி செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து இந்த சிலை திருவள்ளூரில் உள்ள ஒரு கோவில் வழிபாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.