ஆப்கனிஸ்தானில் தங்க சுரங்கம் சரிந்ததில் – 30 பேர் பலி, 15 பேர் படுகாயம்

ஆப்கனிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்க்ஷன் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இங்கு கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர்.
அவ்வாறு தங்கம் கிடைப்பதாக நம்பும் அந்த உள்ளூர் வாசிகள் அரசின் சரிவர அனுமதி பெறாமல் அவர்களாகவே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த தங்க சுரங்கம் 200 அடிவரை தோண்டப்பட்டு இருந்தது. இவ்வாறு 200 அடி வரை தோண்டப்பட்ட இந்த சுரங்கத்தில் சிலர் பணிபுரிந்து வந்தனர்.அப்போது தீடிரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சுரங்கம் உள்பக்கமாக மளமளவென சரிந்து விழுந்தது.
இவ்வாறு சரிந்து விழுந்ததில் அந்த சுரங்கத்தில் வேலைபார்த்த சிலர் அதில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினரும் , போலீசாரும் அங்கு விறைந்தனர். அவர்கள் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகின்றது. மருத்துவ உதவி குழுக்களும் அங்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.















