fbpx
RETrending Nowஅரசியல்இந்தியா

மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்

Former UP Chief minister Mulayam Singh Yadav Hospitalised Again

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ்  உடல் நலக்கோளாறு காரணமாக நேற்றிரவு லக்னோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 5 நாட்களுக்குள் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுவது இது 2வது முறை. வயிறு மற்றும் சிறுநீர் தொடர்பான சிகிச்சைக்காக  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அனுமதிக்கப்பட்டார் என்று சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.

முலாயம்சிங் கடந்த  சனிக்கிழமை தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனாலும், வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மீண்டும் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படாததால் தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close