fbpx
REஉலகம்

Fidel castro வழியில் – கியூபாவின் செயல்கள் – ஓர் அலசல்

இன்னிக்கி இந்த கொரோனா வைரஸ் என்ற பெயர கேட்டாலே நமக்கு நியாபகம் வருவது சீனா, இத்தாலி, அமெரிக்கா,ஈரான், ஸ்பெயின் , இந்தியா என பல நாடுகள் நியாபத்துக்கு வரும் ஆனா கியூபா என்ற நாடு மட்டும் நியாபத்துக்கே வராது. அது ஒரு குட்டி நாடு அதை நியாபகம் செய்கின்ற அளவுக்கு பெரிய நாடானு கேட்டா கண்டிப்பா பெரிய நாடுனு தான் சொல்லுவேன்.இப்போ உலகமே கியூபாவை எதிர்நோக்கி நிற்கிறது. எதுக்குன்னா கொரோனா வைரஸுக்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டார்களா இல்லையா என்ற பதிலை எதிர்நோக்கி.

ஜெர்மனியில் அதுக்கான புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டார்களா, அமெரிக்காவில் ஒரு வாக்சினேஷனை கொடுத்திருக்கிறார்களா அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாகஇருக்கும்.

இஸ்ரேல் அறிவித்திருக்கிறதே கொரோனவுக்கான மருந்தை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்று அதன் உண்மைத்தன்மை என்ன? கியூபா, அமெரிக்கா என்னென்னா பிரச்சினை இருக்கு இதையெல்லாம் தான் பார்க்கப்போகிறோம்.

சீனாவில்தான் முதலில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் வந்தது அதற்கு அவர்கள் எதாவது ஒரு மருந்தை அவர்கள் பயன்படுத்த வேண்டும் இப்படி எதாவது ஒரு மருந்து சொல்லும் போது சார்ஸ் என்ற வைரசுக்கு எதிரான எதாவது ஒரு மருந்து இருக்கிறதா என்று பார்க்கும் போது தான் அந்த மருந்துக்கள் பட்டியல் எடுக்கப்படுகிறது. அந்த பட்டியலில் 30 மருந்துகள் வருகிறது. அதில் முதல் இடத்தில் இருந்த மருந்து தான் இன்டர் பிரோன் ஆல்பா 2 பி என்கின்ற மருந்து.

இந்த மருந்தை யார் கண்டுபிடித்தார்கள் என்று கேட்டால் கியூபாவில் இருக்கக்கூடிய cigb என்ற அமைப்புதான். அதே போல் இந்த மருந்தை கண்டுபிடித்தது இன்று நேற்று கிடையாது 1986-ஆம் ஆண்டே இந்த மருந்தை cigb என்ற அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

இந்த அமைப்பு கண்டுபிடித்த இன்டர் பிரோன் ஆல்பா 2 பி என்ற மருந்தை வைத்துதான் சீனாவில் இந்த அளவில் கொரோனவைரஸை கட்டுப்படுத்த முடிந்தது என்று சீன அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சீனாமட்டும் கிடையாது இத்தாலிக்கும் இதே மருந்து அனுப்பப்பட்டிருக்கு. சீனாவின் பல நிபுணர்களும் இத்தாலிக்கு சென்றிருக்கிறார்கள். பல லத்தின் அமெரிக்க நாடுகள் இந்த இன்டர் பிரோன் ஆல்பா 2 பி என்ற மருந்தை கேட்டு நிற்கிறார்கள்.இவ்வாறு பல நாடுகள் கியூபாவிடம் இந்த மருந்தை தயார் செய்து தரும்படி கேட்கிறார்கள்.

ஆனா 1959-திலிருந்து கிட்டத்தட்ட 60 வருடமாக கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா ரொம்பபெரிய பொருளாதார தடையை விதித்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் அவர்கள் வந்ததில் இருந்து கியூபாவிற்கு எதிராக அதிக அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 191 பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 191 பொருளாதார தடைகளில் கடைசியாக வந்த பொருளாதார தடை என்னவென்றால் இந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி வந்த பொருளாதார தடை WESTERN UNION money transfer எந்த நாட்டில் இருந்தும் கியூபாவிற்கு பணம் அனுப்பக்கூடாது. முதலில் ஒரு ஆயிரம் டாலர் அனுப்பலாம் என்று இருந்தது. அதை அப்படியே தடை செய்து யாரும் அனுப்பக்கூடாது என்று தடை போட்டது தான் கடைசியாக போட்ட பொருளாதார தடை. இவ்வளவு தடைகள் எதற்க்காக என்று கேட்டால் நமக்குள் வரும் முதல் கேள்வியே fidel castro அவர்களா என்ற கேள்விதான் வரும்.

fidel castro அப்படி என்ன செஞ்சாருன்னு கேட்டா மருத்துவத்தை மனிதர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதை சொன்னார். அவர் அதை சொன்னது மட்டும் கிடையாது செய்தும் காட்டினார். மருத்துவம் என்பது ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அதனால் கியூபாவில் இன்றளவும் மருத்துவம் என்பது அனைவருக்கும் சுலபமாக கிடைக்கக்கூடியதாக உள்ளது.

பல நாடுகள் கொரோனா வைரஸுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் போட்டியில் ஓடிக்கொண்டுள்ளன. இதை போட்டி என்று சொல்வதை விட வியாபாரம் என்று சொல்லலாம். ஆனால் கியூபா இதை லாபகரமான விஷயமாக பார்க்குமா என்று கேட்டால் அவர்கள் வரலாற்றிலேயே மருந்து என்பதை தொழிலாக பார்த்ததே கிடையாது . பெரிய பெரிய அளவில் அவர்கள் ஏற்றுமதி செய்வார்கள் அதாவது அவர்களில் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது மருந்துதான் அதனால் அவர்களுக்கு கிடைப்பது லாபம் தான் ஆனால் அந்த லாபம் பலமடங்காக இருக்கவேண்டும் என கியூபா நினைக்கமாட்டார்கள். இது நான் சொன்ன கருத்து கிடையாது மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற ஜே.ரோபர்ட் அவர்கள் கூறினார்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள மருந்து கம்பெனிகள் மருந்தை எதற்காக கண்டுபிடிக்கிறார்கள் என்றால் நோய் குணமாவதற்கு கிடையாது அந்த நோய் மறுபடியும் மறுபடியும் ஒரு மனிதனுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் கண்டுபிடிக்கிறார்கள். கியூபா நாட்டின் அமைப்பு அல்லது கியூபா நாட்டின் மருத்துவர்கள் ஏன் மருந்தை கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அந்த வியாதி அன்றுடன் மனிதனிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அதை வைத்து வேறொரு வியாதி வரக்கூடாது.கியூபாவில் பல நோய்களுக்கும் கேன்சர் உட்பட பல நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் பல நாடுகள் கியூபாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் .

இது யாருக்கு பிடிக்கவில்லை அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை அதனால் தான் கியூபாவில் அதிக அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இன்டர் பிரோன் ஆல்பா 2 பி என்ற மருந்தை யாரும் வாங்கக்கூடாது என அமெரிக்கா மறைமுகமான சில விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.சரி இருந்தாலும் இந்த இன்டர் பிரோன் ஆல்பா 2 பி என்ற மருந்து சீனாவிற்கு எப்படி கிடைத்தது என்று கேட்டால், கியூபா, சீனா, ஸ்பெயின் இந்த 3 நாடுகளும் மருத்துவ ஆலோசனை நாடுகளாக உள்ளது. அதனால் தான் சீனாவில் இந்த இன்டர் பிரோன் ஆல்பா 2 பி மருந்து கிடைத்தது. இந்த மருந்தை வைத்துதான் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடிந்தது.

பல நாடுகளிலும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படலாம் ஆனால் கியூபாவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துதான் சிறந்ததாக இருக்கும் என அந்நாட்டின் உண்மை தன்மையை அறிந்த ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும்.

ஒரு மருந்தை அந்நோய் குணமாவதற்க்காக தான் கடுபிடிக்கப்பட வேண்டும் அதை விட்டு மற்றொரு நோய் உருவாவதற்கு கண்டுபிடிக்கப்பட கூடாது.

நாம் அறியும் ஒரு நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கும் அறியவைத்து அதன்முலம் கியூபாவின் பெருமையையும் தெரியவைப்போம்.நல்லதையே செய்வோம் நல்லதையே பரப்புவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close