சத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் பண்ணும் நிறுவனத்தில் நடக்கும் ஐடீ ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேசவேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் முட்டை சப்ளை பண்ணும் நிறுவனம் திருச்சங்கோட்டில் உள்ளது அங்கு நேற்று இரவு முதல் வருமான வரிச்சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிறுவனம் மூலம் சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றையும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த நிறுவனத்திற்கு முட்டை, சத்துமாவு வினியோகிக்க உரிமம் வழங்கியுள்ள நிலையில், அந்த நிறுவனங்களில் வருமானவரிச் சோதனை நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியது.
அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில் ஐடி ரெய்டு என்பது சம்மந்தப்பட்ட நிறுவனம் வருமான வரி செலுத்தாதது தொடர்பானது. அதற்காக, தமிழக அரசை தொடர்புபடுத்துவது சரியல்ல என்றார்.