கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள நோட்டு என்று தெரியவர, இடுக்கியைச் சேர்ந்த லியோ, கருநாகப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், புற்றடிப் பகுதியின் ரவீந்திரன் என்பது தெரிய வந்திருக்கிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் கள்ள நோட்டுக்கள் கொல்லத்தில் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லம் முளங்காடுப் பகுதியின் அந்த ஆடம்பர பங்களாவிற்குள் நுழைந்த தனிப்படை அங்கு சோதனை நடத்தியதில் அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், பிரிண்டர் இங்க், அடுத்து ரிசர்வ் வங்கியின் போலிசீல், உள்ளிட்டவைகள் பறி முதல் செய்யப்பட்டன.
மேலும் அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த 57 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களும் சிக்கியுள்ளன. பார்த்தால் கள்ள நோட்டு என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அசல் ரூபாய் தாள் என்றும் தெரிய வந்திருக்கிறது. அதோடு ஒரு மடங்கு நல்ல நோட்டிற்கு மூன்று மடங்கு கள்ள நோட்டுக்களை சப்ளை செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது, என்று சொல்கிற கொல்லம் போலீசார், அந்தப் பங்களாவின் உரிமையாளரான மலையாள சீரியல் நடிகை சூர்யா சசி. அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் குறிப்பிடும்படியான கள்ளக் கரன்சி அச்சடிக்கப்பயன் படுத்தப்பட்ட அசல் பேப்பர் பற்றிய சந்தேகம் கொல்லம் ஆய்வாளர் அருளுக்குத் தெரியப்படுத்த அவர் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் கள்ள நோட்டுச் சம்பவம், அடுத்து கொல்லம் பற்றியும், என்.ஐ.ஏ. எனப்படும் வெளி நாட்டுச் சதியை அறியும், தேசிய புலனாய்வுத்துறை தெரியப்படுத்தியவர், அந்தப் பேப்பர் பற்றிய வெளி நாட்டு நெட்ஒர்க் பற்றியதையும் குறிப்பிட, தற்போது தேசிய புலனாய்வுத்துறை தனது விசாரணையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பேப்பர் பற்றிய அதிர வைக்கும் நெட் ஒர்க் வெளி வரலாம் என்கிறார்கள் விசாரணை அமைப்பினர்.