ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் உளறல்(உண்மை!)பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!!!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஜெயலிதா அப்பல்லோவில் இட்லியும் சாப்பிடவில்லை, நாங்கள் பொய் தான் சொன்னோம் என்று கூறி பகிரங்க மன்னிப்பு கேட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. அதோடு நிற்கவில்லை அமைச்சரின் சர்ச்சை பேச்சு. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
இவ்வாறு பேசிய அமைச்சர் பின்னர் சுதாரித்துகொண்டார்.
கொள்ளையடித்த உங்களின் கும்பலால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். மனம் நொந்துபோய்தான் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உங்களுக்கு தினம் தினம் சோதனை வருகிறது என்று சொன்னால் ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை தண்டித்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம் . தினகரன் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டவர் தான் தினகரன். உங்களை உறுப்பினராக கூட சேர்க்கவில்லை துரோகியின் பின்னால் 18 எம்எல்ஏக்கள் சென்றனர். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை கருத்துகளை கூறியுள்ளார். ஆனால் தற்போது ஜெயலலிதாவே கொள்ளையடித்தார் என்று கூறி அமைச்சர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.
ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்டவற்றால் அதிமுக மீது பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.