விவசாயிகளை 8 வழிச்சாலைக்கு எதிராக தூண்டியதாக சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தருமபுரி மாவட்டம் ஆரூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை – சேலம் இடையே வரவுள்ள 8 வழிச்சாலைக்கு தருமபுரி,திருவண்ணாமலை,சேலம்,கிருஷ்ணகிரி,காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அரசு நிலம் கையக படுத்தியுள்ளது.
இதை எதிர்த்து பல கிராம விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நிலத்தை தர முடியாது என கதறுகிறார்கள். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி சந்தித்து ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறியவரை போராடத் தூண்டினார் என போலீசார் கைது செய்துள்ளனர்.