fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு…! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

Corona cases increases heavily in india

டெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,16 லிருந்து 3,303 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 61,149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 37,136 பேர் திக்கப்பட்டுள்ளனர். இதில் 9,639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,325 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் குஜராத்தில் 12,140, தமிழகத்தில் 12,448, டெல்லியில் 10,554, ராஜஸ்தானில் 5,845, மத்திய பிரதேசத்தில் 5,465, உத்தரப்பிரதேசத்தில் 4,926, ஆந்திராவில் 2,532, தெலுங்கானாவில் 1,634, கர்நாடகாவில் 1,397, கேரளாவில் 642, புதுச்சேரியில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close