பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை ; குமாரசாமி திட்டவட்டம்!!!
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி 113 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.
இந்நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள அலுவலகத்தில்ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கர்நாடகாவில் கூட்டணி அமைக்கப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.