fbpx
RETamil Newsஉலகம்

கொரோனா நோயாளிகள் இல்லாததால் சீன நாட்டின் சிறப்பு மருத்துவமனைகள் மூடப்படுகின்றன

China's specialist hospitals are closing due to the absence of coronal patients

பெய்ஜிங்கில் உள்ள சியாடோங்சன் மருத்துவமனையில் உள்ள அனைத்து COVID-19 நோயாளிகளும் குணமடைந்த நிலையில் , அந்த மருத்துவமனை மூடப்படுகிறது .

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளில் பரவி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி உள்ளது . இந்த வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவத் தொடங்கியதும் , சீன அரசு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது. நகரின் வடக்கு புறநகரில் அமைந்துள்ள தற்காலிக கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனை ஆரம்பத்தில் 2003 ஆம் ஆண்டில் SARS (Severe Acute Respiratory Syndrome) நோயாளிகளைத் தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது அது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.

இதற்கிடையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) செவ்வாயன்று கொரோனா வைரஸால் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3 பேர் வெளிநாட்டு பயணிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் சீனாவில் இதுவரை 82,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 648 பேர் மருத்துவமனையில் உள்ளனர். 77,555 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது அந்த மருத்துவமனை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close