fbpx
ChennaiRETamil NewsTrending Now

திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்

Chief minister edapddi palanisamy meeting

சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அனைத்து பாதிப்புகளும் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு, கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளது. மாற்று இடமாக, திருமழிசை பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. சந்தையை இடமாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

திருமழிசை சந்தை பற்றியும், என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close