fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

கொடநாடு விவகாரத்தில் தெகல்ஹா முன்னாள் ஆசியரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக மேத்யூ சாமுவேல் ஆணவப்படம் வெளியிட்டார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுகவின் ஐடி பிரிவின் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேத்யூ சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம். இதையடுத்து மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Related Articles

Back to top button
Close
Close