காவிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க வைத்த கர்நாடக தேர்தல்!!!
கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்ததால், அந்த கட்சிக்கு எதிராக புதிய தேசிய அணி உருவாகும் நிலை உருவாகியுள்ளது .
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளை பாஜக கைப்பற்றியபோதிலும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி அந்த கட்சிக்கு இல்லை.
இருப்பினும் கவர்னரின் துணையுடன் ஆட்சி அமைக்க முயன்று அவமானப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் பேரில் கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த குழப்பங்கள் தேசிய அளவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக தலைவர்கள் கருதுகின்றனர்.
மேலும் தற்போது அகில இந்திய அளவில் மாநில கட்சிகளின் தலைவர்கள் தெளிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியை தலைமை ஏற்க அவர்களில் சிலர் விரும்பவில்லை என்றும் தெறிகிறது .
இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.